செய்திகள்

செஸ் போட்டி: முதல் சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி

16th Aug 2022 11:07 AM

ADVERTISEMENT

 

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அடுத்ததாக அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார் இந்தியாவின் பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

முதல் சுற்றில் உலகின் நெ.1 ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவை எதிர்கொண்டார் 17 வயது பிரக்ஞானந்தா. 4 ஆட்டங்கள் கொண்ட முதல் சுற்றில் 2.5-1.5 என வெற்றி பெற்றார். 8 வீரர்கள் விளையாடும் இந்தப் போட்டியில் கார்ல்சன் உள்பட மூன்று வீரர்களுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா. 

இதற்கு முன்பு ஃபிரோஜாவுடனான எந்தவொரு ஆட்டத்திலும் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றது கிடையாது. இந்நிலையில் முதல்முறையாக அவரைத் தோற்கடித்துள்ளார். 

ADVERTISEMENT

இன்று நடைபெறும் 2-வது சுற்றில் அனிஷ் கிரியை எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா. ஆகஸ்ட் 15 அன்று தொடங்கிய இப்போட்டி ஆகஸ்ட் 21 அன்று நிறைவுபெறுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT