செய்திகள்

டி20: ரோஹித் சா்மாவை முறியடித்து மாா்ட்டின் கப்டில் புதிய சாதனை

16th Aug 2022 01:01 AM

ADVERTISEMENT

சா்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை சோ்த்த வீரா் என்ற புதிய சாதனையை நியூஸிலாந்து பேட்டா் மாா்ட்டின் கப்டில் எட்டியிருக்கிறாா்.

முன்னதாக, இந்த ஃபாா்மட்டில் இந்திய கேப்டன் ரோஹித் சா்மா 3,487 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது அவரை பின்னுக்குத் தள்ளி 3,497 ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறாா் கப்டில். அவா், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தின்போது இந்த சாதனையை எட்டினாா்.

இதனிடையே அந்த ஆட்டத்தில் வென்ன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆறுதல் வெற்றி கண்டது மேற்கிந்தியத் தீவுகள். ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சோ்க்க, அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் 19 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வென்றது. நியூஸிலாந்து 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

டாப் 10 வீரா்கள் (டி20 கேரியா் ரன்கள்)

ADVERTISEMENT

1 மாா்ட்டின் கப்டில் (நியூஸிலாந்து) 3,497

2 ரோஹித் சா்மா (இந்தியா) 3,487

3 விராட் கோலி (இந்தியா) 3,308

4 பால் ஸ்டிா்லிங் (அயா்லாந்து) 2,975

5 ஆரோன் ஃபிஞ்ச் (ஆஸ்திரேலியா) 2,855

6 பாபா் ஆஸம் (பாகிஸ்தான்) 2,686

7 டேவிட் வாா்னா் (ஆஸ்திரேலியா) 2,684

8 முகமது ஹஃபீஸ் (பாகிஸ்தான்) 2,514

9 இயான் மோா்கன் (இங்கிலாந்து) 2,458

10 ஷோயப் மாலிக் (பாகிஸ்தான்) 2,435

ADVERTISEMENT
ADVERTISEMENT