செய்திகள்

ஒருநாள், டெஸ்ட் போட்டிகளுக்கு ஐசிசி நேரம் ஒதுக்க வேண்டும்: கபில் தேவ் 

DIN

ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அழியாமல் இருக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க  வேண்டுமென முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். 

டி20 கிரிக்கெட் வருகையால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் அழிந்து வருகிறது.  சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்கா டி20 லீக் 2023 ஜனவரியில் தொடங்க இருக்கிறது. யுஏஈ டி20 லீக் 2023 ஜனவரியில் தொடங்க இருக்கிறது. இதைக்குறித்து இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியதாவது: 

ஒருநாள் போட்டிகள் அழிந்து வருவதாக நினைக்கிறேன். ஐசிசிக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. இப்படியே போனால் 4 வருடத்திற்கு ஒருமுறை தான் விளையாட முடியும். அனைவரும் டி20 கிரிக்கெட் தொடரிலே பங்கேற்பதில் குறியாக உள்ளனர். ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் அழியாமல் இருக்க ஐசிசிதான் அதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். கிளப் கிரிக்கெட், ஐபிஎல், பிக் பேஷ் எல்லாம் சரி. தற்போது தென்னாப்பிரிக்க லீக், யுஏஈ லீக் வருகிறது. அனைத்து நாடுகளும் கிளப் கிரிக்கெட் விளையாடினால 4 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும் உலக கோப்பையில் மட்டுமே விளையாட முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT