செய்திகள்

இங்கிலாந்தில் சாதனை படைத்த புஜாரா!

15th Aug 2022 04:32 PM

ADVERTISEMENT

 

இந்தியாவின் பிரபல டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா இங்கிலாந்தில் புதிய சாதனையை படைத்துள்ளார். 

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ராயல் லண்டன் ஒருநாள் கிரிக்கெட் (லிஸ்ட் ஏ) போட்டியில் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா சசெக்ஸ் அணிக்காக் விளையாடி வெருகிறார். இதில் அவர் சர்ரே அணிக்கு எதிராக 131 பந்துகளில் 174 ரன்களை எடுத்து அசத்தினார். இதுவரை சசெக்ஸ் அணியில் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் இந்த ரன்களை அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் 2019இல் ஆல்ரவுண்டர் டேவிட் வெய்ஸ் 171 ரன்களை எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்து வந்தது. 

2012இல் ராஜ்கோட்டில் லிஸ்ட் ஏ போட்டியில் 158 ரன்களை எடுத்திருந்தார். அவரது சொந்த சாதனையையும் அவர் முறியடித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை 79 பந்துகளில் 107 ரன்களை அசத்தினார். 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலைமையில் புஜாரா விளையாட வந்தார். அவரது 174 ரன்களால் நாங்கள் 378 ரன்களை எடுத்தோம் 50 ஓவர் முடிவில் என சசெக்ஸ் அணியின் கேப்டன் கூறினார். கடைசி 28 பந்துகளில் 74 ரன்களை அடுத்து அசத்துயதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் சர்ரே அணி 162 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 216 ரன்கள் வித்தியாசத்தில் சசெக்ஸ் அணி வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT