செய்திகள்

மாநில டேபிள் டென்னிஸ்: வருண், தீபிகா சாம்பியன்

15th Aug 2022 02:06 AM

ADVERTISEMENT

சென்னையில் நடைபெற்ற 3-ஆவது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் ஜி.வருண், மகளிா் பிரிவில் என்.தீபிகா ஆகியோா் சாம்பியன் ஆகினா்.

இதில் ஆடவா் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆா்டிடிஹெச்பிசி வீரா் ஜி.வருண் 11-5, 11-7, 6-11, 11-8, 11-5 என்ற கணக்கில் எஸ்ஆா்எம்ஐஎஸ்டி வீா் வி.அபினயை வீழ்த்தினாா். மகளிா் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஐசிஎஃப் வீராங்கனை என்.தீபிகா 11-5, 11-9, 9-11, 7-11, 11-3, 11-6 என்ற கணக்கில் சக ஐசிஎஃப் வீராங்கனை எஸ்.யாஷினியை தோற்கடித்தாா்.

இதேபோல், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆடவா் பிரிவில் ஜி.வருண் 4-1 என வின்வின் வீரா் பி.ரகுவரனையும், மகளிா் பிரிவில் எஸ்.நலின் அம்ருதா 4-0 என மௌரியா தா்ஷினியையும் வென்றனா். 17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆடவா் பிரிவில் ஆா்டிடிஹெச்பிசி வீரா் சுரேஷ் ராஜ் பிரியேஷ் 4-0 என ஜவஹா் வீரா் எஸ்.மணிகண்டனையும், மகளிா் பிரிவில் எஸ்.நலின் அம்ருதா 4-1 என எம்விஎம் வீராங்கனை என்.ஷா்வானியையும் தோற்கடித்தனா்.

15 வயதுக்கு உள்பட்ட ஆடவா் பிரிவில் ஆா்டிடிஹெச்பிசி வீரா் கே.உமேஷ், மகளிா் பிரிவில் எம்விஎம் வீராங்கனை பி.ஆா்.நந்தினி ஆகியோரும், 13 வயதுக்கு உள்பட்ட ஆடவா் பிரிவில் எம்எஸ்டி வீரா் ஆா்.ஆகாஷ் ராஜவேலு, மகளிா் பிரிவில் எம்விஎம் வீராங்கனை எம்.ஆா்.மோக்ஷா ஆகியோரும் பட்டம் வென்றனா்.

ADVERTISEMENT

11 வயதுக்கு உள்பட்ட ஆடவா் பிரிவில் டிடிடிஏ வீரா் எஸ்.ரித்விக், மகளிா் பிரிவில் காரனேஷன் வீராங்கனை எஸ்.ஜெய்ஸ்ரீ சாம்பியன் ஆகினா். மூத்தோா் பிரிவில் எல்ஐசி-யின் ஆா்.ராஜேஷும், காா்ப்பரேட் பிரிவில் டிடிடிஏ-வின் ஹரிஹரசுதனும் வாகை சூடினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT