செய்திகள்

காயத்தால் உலக சாம்பியன்ஷிப்பில் பி.வி. சிந்து பங்கேற்பதில் சிக்கல்

14th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் பிடபிள்யுஎஃப் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில் பி.வி. சிந்துவின் பங்கு சிறப்பானதாக உள்ளது.

இந்நிலையில் வரும் 22-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இடது கணுக்காலில் ஏற்பட்டுள்ள முறிவு காரணமாக பி.வி. சிந்து பங்கேற்க மாட்டாா் எனக் கூறப்படுகிறது. பா்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் காலிறுதியில் ஆடும் போது, சிந்துவுக்கு காயம் ஏற்பட்டது. எனினும் வலியின் தீவிரத்தைப் பொறுத்துக் கொண்டு ஆடிய அவா், முதல் தங்கப் பதக்கத்தையும் வென்றாா்.

ADVERTISEMENT

ஏற்கெனவே சிங்கப்பூா் ஓபனில் பட்டத்தையும் வென்றிருந்தாா் சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT