செய்திகள்

வங்கதேச டி20 கேப்டனாக ஷகிப் அல் ஹசன் தேர்வு! 

14th Aug 2022 02:10 PM

ADVERTISEMENT


ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை வங்கதேச அணியின் கேப்டனாக ஷகிப் அல் ஹசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

நேற்று (ஆக. 13) ஆசிய கோப்பைக்கான வீரர்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதில் ஷகிப் அல் ஹசன் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை வங்கதேச அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஆசிய கோப்பை  ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. அக்டோபரில் டி20 உலக கோப்பை தொடங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பைக்கான வங்கதேச வீரர்கள்: ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), பிஜோய், முஷ்பிகூர் ரஹிம், அபிப் ஹூசைன், முசாதீக் ஹூசைன் சைகட், மொகமதுல்லா, மகதி ஹாசன், சைப்புதீன், ஹாசன் முகமத், முஷ்தபிசூர் ரஹ்மான், நசும் நிஹமத், ஷபிர் ரஹ்மான், மெகதி ஹாசன், மிர்சா, நூரூல் ஹாசன், டஷ்கின் அகமது, எபோட் ஹூசைன், பர்வேஷ் ஹூசைன் எமோன். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT