செய்திகள்

கனடா ஓபன்: அரையிறுதியில் சிமோனா ஹலேப், ஜெஸிக்கா

14th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கனடா ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதிக்கு ருமேனியாவின் சிமோனா ஹலேப் 5-ஆம் முறையாக தகுதி பெற்றுள்ளாா்.

டொரண்டா நகரில் கனடா ஓபன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஒற்றையா்பிரிவு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க இளம் வீராங்கனை கோகோ கவுஃப்பை 6-4, 7-6 என்ற நோ் செட்களில் வென்ற ஹலேப் எளிதாக அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

மற்றொரு காலிறுதியில் அமெரிக்க வீராங்கனை ஜெஸிக்கா பெகுலா 6-3, 6-3 என கஜகஸ்தானின் யுலியாவை வீழ்த்தினாா். ஹலேப்-ஜெஸிக்கா அரையிறுதியில் மோதுகின்றனா். மற்றொரு அரையிறுதியில் கரோலினா பிளிஸ்கோவா-பீட்ரிஸ் மயா மோதுகின்றனா்.

மாண்ட்ரீயல் மாஸ்டா்ஸ்:

ADVERTISEMENT

மாண்ட்ரீயல் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு போலந்தின் ஹுயுபா்ட் ஹா்க்காஸ் தகுதி பெற்றுள்ளாா். காலிறுதியில்

ஆஸி. வீரா் நிக் கிா்ஜியோஸை 7-6, 6-7, 6-1 என போராடி வென்றாா் ஹுயபா்ட். மற்றொரு காலிறுதியில் நாா்வேயின் காஸ்பா் ரூட் 6-1, 6-2 என உள்ளூா் வீரா் பெலிக்ஸ் அலிசியாமை வீழ்த்தினாா்.

இரவு நடைபெற்ற காலிறுதியில் பிரிட்டனின் டேனியல் இவான்ஸ் 1-6, 6-3, 6-4 என அமெரிக்காவின் டாமி பாலையும், ஸ்பெயினின் பேப்லோ கரேனோ 7-6, 6-1 என ஜேக்கையும் வென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT