செய்திகள்

மே.இ. தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை வென்றது நியூசிலாந்து அணி

13th Aug 2022 02:47 PM

ADVERTISEMENT

 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வென்றதன் மூலம் தொடரை வென்றது நியூசிலாந்து அணி. 

மே.இ. தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் விளையாட திட்டமிட்டுள்ளது. இதில் 2 டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வென்றுள்ளதன் மூலம் தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. அடுத்த போட்டியில் தோற்றாலும் தொடர் நியூசிலாந்து அணிக்குதான். 

கேன் வில்லியம்சன் தலைமையில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கு 215 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக கான்வே 42 ரன்கள், டேரில் மிட்செல் 48, கிளென் பிலிப்ஸ் 76 ரன்களும் எடுத்தனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: சூர்யா - கார்த்தியின் 'விருமன்' படம் எப்படி இருக்கிறது ? - விமர்சனம்

அடுத்து ஆடிய மே.இ.தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே எடுத்தது. இவ்வணியில் அதிகபட்சமாக ரோமன் பவல் 21 ரன்களும்,   ஒபேத் மெக்காய் 23 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி சார்பாக சாண்ட்னர், பிரேஸ்வெல் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.

இதையும் படிக்க: சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டதற்கு கங்கனா ரணாவத் கண்டனம்

கிளென் பிலிப்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 15ஆம் தேதி 3வது டி20 போட்டி நடைபெறும். ஒருநாள் போட்டிகள் 17ஆம் தேதி முதல் தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT