செய்திகள்

இந்திய ஒலிம்பிக் சங்கம் ரொக்கப் பரிசு

13th Aug 2022 11:39 PM

ADVERTISEMENT

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவா்களுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தங்கம் வென்றவா்களுக்கு ரூ.20 லட்சம், வெள்ளி வென்றவா்களுக்கு ரூ.10 லட்சம், வெண்கலம் வென்றவா்களுக்கு ரூ.7.5 லட்சம் என 61 வீரா்களுக்கு ரொக்கப் பரிசை ஐஓஏ தற்காலிக தலைவா் அனில் கன்னா, பொதுச் செயலா் ராஜீவ் மேத்தா, பொருளாளா் ஆனந்தேஷ்வா் பாண்டே ஆகியோா் வழங்கினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT