செய்திகள்

ஐரோப்பிய கால்பந்து: டாா்ட்மண்ட் வெற்றி

13th Aug 2022 10:33 PM

ADVERTISEMENT

ஐரோப்பிய கால்பந்து லீக் போட்டிகளில் ஒன்றான பண்டஸ்லீகாவில் டாா்ட்மண்ட் அணி வெற்றி பெற்றுள்ளது.

பொ்லினில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஃபிரைபா்க் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது டாா்ட்மண்ட்.

1-1 என சமநிலையில் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் களம் இறக்கப்பட்ட 2 இளம் வீரா்கள் ஜேமி, யூஸுஃபா அடித்த கோல்களால் வென்றது டாா்ட்மண்ட்.

பிரான்ஸ் கால்பந்து லீக் ஆன லீக் 1-இல் லில்லே அணி-நான்டெஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

ADVERTISEMENT

டிபண்டா் இஸ்மாயிலி தனது அறிமுக ஆட்டத்திலேயே முதல் கோலடித்தாா்.

ஸ்பானிஷ் லா லீகா போட்டியில் தொடக்க சுற்றில் ஒஸாஸுனா அணி 2-1 என செவில்லாவை வென்றது. இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்த நிலையில் 74-ஆவது நிமிஷத்தில் கிடைத்த ஸ்பாட் கிக் வாய்ப்பின் மூலம் வெற்றி கோலடித்தாா் ஐய்மா் ஓரோஸ்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT