செய்திகள்

ஆமிர் கான் படம்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் எதிர்ப்பு

DIN

ஆமிர் கான் நடித்து நேற்று வெளியான லால்சிங் சத்தா படத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மான்டி பனேசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்துக்குப் பிறகு ஆமிர் கான் நடித்துள்ள படம் - லால் சிங் சத்தா. ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்பின் ரீமேக் இது. 

இந்தப் படத்தில் ஆமிர் கானின் ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார். இருவரும் இதற்கு முன்பு த்ரீ இடியட்ஸ், தலாஸ் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்கள். சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா. நேற்று (ஆகஸ்ட் 11) இப்படம் வெளியானது. 

இந்நிலையில் இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரரான மான்டி பனேசர், இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் கூறியதாவது:

அமெரிக்க ராணுவத்துக்கு ஃபாரஸ்ட் கம்ப் படம் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வியட்நாம் போரின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகக் குறைந்த நுண்ணறிவு கொண்ட வீரர்களை அமெரிக்கா தேர்வு செய்தது.  இந்தப் படம் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீக்கியர்களுக்கும் அவமரியாதை செய்துள்ளது. இழிவானது என்கிற ட்வீட்டை வெளியிட்டு அதன் கூடவே, #லால் சிங் சத்தா படத்தைத் தவிர்க்கவும் என்கிற ஹாஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். மற்றொரு ட்வீட்டில், ஆமிர் கான் அறிவற்றவராக லால் சிங் சத்தா  படத்தில் நடித்துள்ளார். ஃபாரஸ்ட் கம்ப் படமே அறிவில்லாதது தான் என்று தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

40 வயது மான்டி பனேசர், இங்கிலாந்து அணிக்காக 2006 முதல் 2013 வரை 50 டெஸ்டுகள், 1 டி20, 26 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

காங். தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல்? கார்கே தலைமையில் செயற்குழு கூட்டம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

சேலம்: மோடி கூட்டத்தில் ராமதாஸ், ஓபிஎஸ், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!

‘கங்குவா’ டீசர் இன்று வெளியீடு? சூர்யா வெளியிட்ட பதிவு!

திண்டுக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

SCROLL FOR NEXT