செய்திகள்

டி20 கிரிக்கெட்டில் பிராவோவின் புதிய சாதனை

12th Aug 2022 05:47 PM

ADVERTISEMENT

 

டி20 கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிராவோ.

38 வயது பிராவோ, இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ட்ரட் போட்டியில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை எடுத்தார் பிராவோ. இதையடுத்து டி20 கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். 

ADVERTISEMENT

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 91 ஆட்டங்களில் 78 விக்கெட்டுகளும் ஐபிஎல் போட்டியில் 161 ஆட்டங்களில் 183 விக்கெட்டுகளும் இதர டி20 ஆட்டங்களில் 339 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 339 ஆட்டங்களில் 466 விக்கெட்டுகளுடன் ரஷித் கான் 2-வது இடத்திலும் 460 விக்கெட்டுகளுடன் நரைன் 3-வது இடத்திலும் உள்ளார்கள். 

Tags : Bravo T20
ADVERTISEMENT
ADVERTISEMENT