செய்திகள்

2023 மார்ச் மாதத்தில் மகளிர் ஐபிஎல்?

12th Aug 2022 04:27 PM

ADVERTISEMENT

 


2023 மார்ச் மாதத்தில் மகளிர் ஐபிஎல் போட்டியைத் தொடங்க பிசிசிஐ திட்டுமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஐபிஎல் போட்டியின்போது மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் நடைபெறுவது வழக்கம். எனினும் இதர நாடுகளைப் போலவே இந்தியாவிலும் மகளிர் டி20 லீக் போட்டியை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

மகளிர் ஐபிஎல் போட்டியை அடுத்த வருடம் தொடங்குவது சரியாக இருக்கும். அது நிச்சயம் ஐபிஎல் போட்டியைப் போல பெரிய வெற்றியை அடையும் என்று கடந்த பிப்ரவரி மாதம் பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார். மகளிர் ஐபிஎல் போட்டி விரைவில் தொடங்கும், அதன் மதிப்பு அனைவரையும் திகைப்பூட்டும் விதத்தில் இருக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் கூறினார். 

ADVERTISEMENT

இந்நிலையில் 2023 மார்ச் மாதம் ஐபிஎல் போட்டியைத் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிசிசிஐ வருடாந்திரப் பொதுக்கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்திய மகளிர் அணி சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்றது. இதனால் மகளிர் கிரிக்கெட் மீதான ஆர்வம் இந்திய ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஓய்வு பெற்ற மூத்த வீராங்கனை மிதாலி ராஜ், மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT