செய்திகள்

தி ஹண்ட்ரட் போட்டியில் முதல் சதத்தை அடித்த வீரர் (விடியோ)

11th Aug 2022 02:51 PM

ADVERTISEMENT

 

இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ட்ரட் போட்டியில் முதல் சதத்தை அடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் வில் ஸ்மீட்.

பிர்மிங்கமில் நடைபெற்ற பிர்மிங்கம் பீனிக்ஸ் - சதர்ன் பிரேவ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பிர்மிங்கம் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

பீனிக்ஸ் அணியைச் சேர்ந்த 20 வயது வில் ஸ்மீட், 50 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தி ஹண்ட்ரட் போட்டியின் முதல் சதத்தை அடித்தவர் என்கிற பெருமையையும் அவர் பெற்றார். முதல் 50 ரன்களை 25 பந்துகளில் எடுத்தார். இன்னிங்ஸின் கடைசி 3 பந்துகளில் சதமடிக்க வில் ஸ்மீடுக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. ஒரு பவுண்டரியும் இரண்டு ரன்களும் எடுத்து சதத்தைப் பூர்த்தி செய்தார்.  

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT