செய்திகள்

டி20: மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்திய நியூசிலாந்து

11th Aug 2022 12:15 PM

ADVERTISEMENT

 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி.

கிங்ஸ்டனில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. கான்வே 43, கேன் வில்லியம்சன் 47 ரன்கள் எடுத்தார்கள். மே.இ. தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ஷமரா புரூக்ஸ் 42 ரன்கள் எடுத்தார். சான்ட்னர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட டிரெண்ட் போல்ட் இந்த ஆட்டத்தில் பங்கேற்று 1 விக்கெட்டை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது சான்ட்னருக்கு வழங்கப்பட்டது. 

நியூசிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT