செய்திகள்

ஆமீர் கானின் புதிய படத்தைப் பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்

11th Aug 2022 03:22 PM

ADVERTISEMENT

 

ஆமிர் கான் நடித்து இன்று வெளியான லால்சிங் சத்தா படத்தைப் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்துக்குப் பிறகு ஆமிர் கான் நடித்துள்ள படம் - லால் சிங் சத்தா. ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்பின் ரீமேக் இது. 

இந்தப் படத்தில் ஆமிர் கானின் ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார். இருவரும் இதற்கு முன்பு த்ரீ இடியட்ஸ், தலாஸ் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்கள். சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா. இன்று (ஆகஸ்ட் 11) இப்படம் வெளியானது. 

ADVERTISEMENT

இந்நிலையில் படத்தைப் பார்த்த முன்னாள் வீரர் இர்பான் பதான் படத்தைப் பாராட்டி ட்வீட் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

லால்சிங் சத்தா படத்தை ஜாலியாகப் பார்த்தேன். தன்னுடைய நல்ல மனசால் லாலை உங்களைக் கவர்வான். எப்போதும் போல ஆமிர் கான் தன்னுடைய கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார். நல்ல படம் பார்த்த உணர்வை அளித்த ஆமிர் கான் பட நிறுவனத்துக்குப் பாராட்டுகள் என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT