செய்திகள்

பிறந்த நாள்: தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்ற பிரக்ஞானந்தா

10th Aug 2022 04:20 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, தனது பிறந்த நாளன்று தமிழக முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. தமிழக அரசு, சா்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) சாா்பில் ரூ.100 கோடி செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரம் ஃபோா் பாயிண்ட் ஷெரட்டன் ஹோட்டலில் கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கியது. ஓபன் பிரிவில் 187, மகளிா் பிரிவில் 162 நாடுகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். மொத்தம் 11 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. 

ஓபன் பிரிவில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருணாக் சத்வனி இடம்பெற்ற இந்திய பி அணி வெண்கலம் வென்றது. விளையாட்டு வீரா்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபா் பதக்கங்களில் பிரக்ஞானந்தா வெண்கலம் வென்றார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று தனது 17-வது பிறந்த நாளைக் கொண்டாடும் இளம் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, தமிழக முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற இரு இந்திய அணிகளுக்கும் (ஓபன் பிரிவில் இந்தியா பி, மகளிர் பிரிவில் இந்தியா ஏ)  தலா 1 கோடி ரூபாய் பரிசுத்தொகையை இன்று அறிவித்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். இன்று காலை இரு இந்திய செஸ் அணிகளின் வீரர், வீராங்கனைகளுக்கும் பரிசுத்தொகையை முதல்வர் வழங்கினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT