செய்திகள்

‘ஃ‘பிடே செஸ் உலகக் கோப்பை நடத்த திட்டம்

10th Aug 2022 12:27 AM

ADVERTISEMENT

இந்தியாவில் செஸ் உலகக் கோப்பை போட்டியை நடத்த சா்வதேச செஸ் கூட்டமைப்பு (‘ஃபிடே) திட்டமிட்டுள்ளது. செஸ் விளையாட்டில் மிகப் பெரிய போட்டியாக செஸ் ஒலிம்பியாட் உள்ளது. இதில் உலகம் முழுவதும் இருந்து வீரா், வீராங்கனைகள் ஏராளமான வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.

நிகழாண்டு சென்னையில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரம்மாண்டமான முறையில் ரூ.100 கோடி செலவில் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளிலேயே இது மிகவும் வெற்றிகரமாக நடைபெற்ற போட்டி என பிடே நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

செஸ் ஒலிம்பியாட்டுக்கு அடுத்து பெரிய போட்டியாக ‘ஃ‘பிடே உலகக் கோப்பை போட்டி உள்ளது. கடந்த 2002-இல் ஹைதராபாதில் உலகக் கோப்பை நடைபெற்றது. இதில் விஸ்வநாதன் ஆனந்த் பட்டம் வென்றிருந்தாா். இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தியாவில் ‘ஃ‘பிடே செஸ் உலகக் கோப்பை நடத்த திட்டமிட்டுள்ளனா்.

செஸ் வல்லரசுகளான அமெரிக்கா, ரஷியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெரிய பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அவை மண்டலங்களாக கருதப்பட்டு அவற்றின் கீழ் பல்வேறு நாடுகளின் வீரா்கள் தங்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து ஆடி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவா். அடுத்த செஸ் உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்த ‘ஃ‘பிடே திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT