செய்திகள்

உலகக் கோப்பைகளை வென்ற ஆஸி. மகளிர் கேப்டன் தற்காலிக ஓய்வு அறிவிப்பு

10th Aug 2022 03:15 PM

ADVERTISEMENT

 

இருமுறை உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லேனிங், கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு எடுப்பதாக அறிவித்துள்ளார்.

2020-ல் டி20 உலகக் கோப்பை, 2022-ல் ஒருநாள் உலகக் கோப்பை, காமன்வெல்த் போட்டிகள் என சமீபத்தில் மூன்று முக்கியமான கோப்பைகளை மேக் லேனிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்காலிக ஓய்வு எடுப்பதாக மேக் லேனிங் அறிவித்துள்ளார். 

கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து விளையாடி வருகிறேன். என் மீது கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார் மெக் லேனிங். 

ADVERTISEMENT

2010-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார் மெக் லேனிங். 2014-ல் 21 வயதில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 171 ஆட்டங்களுக்குத் தலைமை தாங்கி 135 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார். 2017 முதல் 5  ஆட்டங்களை மட்டுமே தவறவிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT