செய்திகள்

காமன்வெல்த் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் பவானி தேவி!

10th Aug 2022 09:39 AM

ADVERTISEMENT

 

காமன்வெல்த் வாள்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவானி தேவி தங்கம் வென்றார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், 22 தங்கம் உள்பட மொத்தம் 61 பதக்கங்களுடன் இந்தியா 4ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து, லண்டனில் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில், சீனியர் வாள்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தின் பவானி தேவி கலந்து கொண்டார்.

ADVERTISEMENT

ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை எதிர்கொண்ட பவானி தேவி, 15-10 என்ற புள்ளிக் கணக்கில் வஸ்லேவாவை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT