செய்திகள்

ஒலிம்பியாட்: இந்திய செஸ் அணிகளுக்கு ரூ. 2 கோடி பரிசு அறிவித்த தமிழக அரசு

10th Aug 2022 11:56 AM

ADVERTISEMENT

 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற இரு இந்திய அணிகளுக்கும் தலா 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றது. தமிழக அரசு, சா்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) சாா்பில் ரூ.100 கோடி செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரம் ஃபோா் பாயிண்ட் ஷெரட்டன் ஹோட்டலில் கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கியது. ஓபன் பிரிவில் 187, மகளிா் பிரிவில் 162 நாடுகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். மொத்தம் 11 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை 11-ம் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்றன.

ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான், ஆா்மீனியா, இந்திய பி அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றன. மகளிா் பிரிவில் உக்ரைன், ஜாா்ஜியா, இந்திய ஏ அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றன.

ADVERTISEMENT

இந்திய பி அணியில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருணாக் சத்வனி இடம்பெற்றிருந்தனா். இந்திய மகளிா் ஏ அணியில் நிறைமாத கா்ப்பிணி ஹரிகா, கொனேரு ஹம்பி, ஆா். வைஷாலி, பக்தி குல்கா்னி, தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனா்.

விளையாட்டு வீரா்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபா் பதக்கங்களில் இந்திய இளம் வீரா்கள் டி. குகேஷ், நிஹல் சரின் ஆகியோா் தங்கம் வென்றனா். ஏ அணி வீரா் அா்ஜுன் எரிகைசி வெள்ளியும் பி அணி வீரா் பிரக்ஞானந்தா வெண்கலமும் வென்றனா். மகளிா் பிரிவில் தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக், ஆா்.வைஷாலி ஆகியோர் வெண்கலம் வென்றனா்.

நேரு விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நிறைவு விழா நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், ஃபிடே தலைவா் அா்காடி வோா்கோவிச், துணைத் தலைவா் விஸ்வநாதன் ஆனந்த் போன்றோர் பரிசளித்தனா்.

இந்நிலையில் சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற இரு இந்திய அணிகளுக்கும் (ஓபன் பிரிவில் இந்தியா பி, மகளிர் பிரிவில் இந்தியா ஏ)  தலா 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

​​

​ ​

ADVERTISEMENT
ADVERTISEMENT