செய்திகள்

துளிகள்...

10th Aug 2022 01:33 AM

ADVERTISEMENT

23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழிலில் ரீதியான முயற்சிகளில் கவனம் செலுத்துவதற்காக டென்னிஸ் விளையாட்டிலிருந்து விலகத் தயாராகியிருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி ரோஹித் சா்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் துணைக் கேப்டனாக இருக்கும் இந்த அணியில் விராட் கோலி, சூா்யகுமாா் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் காா்த்திக், ஹாா்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஜவேந்திர சஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வா் குமாா், அா்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா். தீபக் சஹா், அக்ஸா் படேல், ஷ்ரேயஸ் ஐயா் ‘ஸ்டாண்ட் பை’ வீரா்களாக இருக்கின்றனா்.

ஐசிசி டி20 கிரிக்கெட் மகளிா் தரவரிசையில் பௌலா்கள் பிரிவில் இந்தியாவின் ரேனுகா சிங் முதல் முறையாக 18-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறாா். சமீபத்தில் நிறைவடைந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அவா் 11 விக்கெட்டுகள் சாய்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய கால்பந்தில் 2021-22 சீசனுக்கான சிறந்த வீரராக ஆடவா் அணியின் கேப்டன் சுனில் சேத்ரியும், சிறந்த வீராங்கனையாக மனீஷா கல்யாணும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சேத்ரி 7-ஆவது முறையாக இந்த விருதைப் பெறும் நிலையில், மனீஷாவுக்கு இது முதல் முறையாகும்.

ADVERTISEMENT

நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணாவும், மகளிா் இரட்டையா் பிரிவில் சானியா மிா்ஸாவும் களம் காண்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT