செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி அறிக்கை வாசிப்பு 

9th Aug 2022 07:54 PM

ADVERTISEMENT

 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த அறிக்கையை போட்டி இயக்குநர் பரத் சிங் சவுகான் வாசித்தார். 

பரத் சிங் சவுகான் பேசியதாவது:

வணக்கம் சென்னை. 4 மாதமாக இந்த போட்டிக்காக உழைத்தோம். எப்படி உழைத்தோம் எனத் தெரியவில்லை. ஆனால் வெற்றிகரமாக முடித்து விட்டோம். வரலாற்று நிகழ்வை ஒருங்கமைக்க வாய்பளித்த செஸ் கூட்டமைப்புக்கும் இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. 187 நாடுகள் பங்கேற்ற போட்டியில் 2000 அதிகமான வீரர்கள் பங்கேற்றார்கள். இந்தியா மற்றும் ஆசியாவிலே நடந்த மிகப்பெரிய செஸ் போட்டியை நடத்தியதற்கு பெருமையாக உணர்கிறோம். 

ADVERTISEMENT

தமிழக அரசு அதிகாரிகள், மத்திய அரசு, தன்னார்வளர்கள், ஊடகங்கள் என அனைவருக்கும் நன்றி. குறுகிய நேரத்தில் 185 நாடுகளுக்கு விசா வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. தமிழக முதல்வருக்கு சிறப்பு நன்றி. 

அனைத்து வீரர்களும் பத்திரமாக சொந்த ஊர் திரும்ப வேண்டும். நம்ம செஸ். நம்ம பிரைட்.

ADVERTISEMENT
ADVERTISEMENT