செய்திகள்

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: இந்தியா தோல்வி

8th Aug 2022 01:02 AM

ADVERTISEMENT

 

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியடைந்தது.

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா , ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.

ADVERTISEMENT

பின்னர், களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ஷபாலி வெர்மா மற்றும் ஸ்மிருந்தி மந்தனா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த ஜெமிமா 33 ரன்களையும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 65 ரன்களையும் எடுத்தனர்.

இருப்பினும் , 19.3 ஓவர்களில்  அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. 

இதன் மூலம் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு தங்கப் பதக்கமும், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT