செய்திகள்

ஆசியக் கோப்பை: டி20 - இந்திய அணி அறிவிப்பு 

8th Aug 2022 10:12 PM

ADVERTISEMENT

 

2022 ஆசியக் கோப்பைக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

2022 ஆசியக் கோப்பை டி20 போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 போட்டி இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என ஆறு அணிகள் பங்கேற்கின்றன.

ADVERTISEMENT

தற்போது, ரோகித் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கே.எல்.ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். பும்ரா, ஹர்ஷல் பட்டேல் காயம் காரணமாக அணியிலிருந்து விலகி உள்ளனர்.

விராட் கோலி, சூர்ய குமார், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அஸ்வின், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT