செய்திகள்

ஐசிசி டி20 தரவரிசை: சூர்யகுமார் யாதவுக்கு 2ஆம் இடம்

7th Aug 2022 08:23 PM

ADVERTISEMENT

சர்வதேச டி20 சிறந்த பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (ஆகஸ்ட் 7) வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 816 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம் 818 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறார். மற்றொரு பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 3வது இடத்தில் உள்ளார்.

இதையும் படிக்க: கிண்டி கத்திப்பாரா அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்து ஒருவர் பலி: 2 பேர் காயம்

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை இந்திய அணிக்  கைப்பற்றியுள்ள நிலையில் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT