செய்திகள்

5வது டி20: மழையால் தாமதம், வலுவான நிலையில் இந்திய அணி

7th Aug 2022 09:49 PM

ADVERTISEMENT

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மழையின் காரணத்தால் தாமதமாகியுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி தற்போது வரை 14.3 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.

இதையும் படிக்க: மக்கள் நலனுக்காக அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி 

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கினர். இஷான் கிஷன் 13 பந்துகளில் 11 ரன்கள் குவித்து வெளியேறினார். அதன்பின் தீபக் ஹூடா களம் கண்டார். ஸ்ரேயஸ் மற்றும் தீபக் ஹூடா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர் 40 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

ADVERTISEMENT

இவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததையடுத்து கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை விளையாடிக் கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா 6 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இந்திய அணி தற்போது வரை 14.3 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.

இதையும் படிக்க: காமன்வெல்த்: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு வெண்கலம் 

மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் பந்து வீச்சில் ஜேசன் ஹோல்டர், டொமினிக் டிரேக்ஸ் மற்றும் ஹைடன் வால்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

மழை நின்ற பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT