செய்திகள்

டி20: இந்தியாவுக்கு எதிராக சாதனை படைத்த மே.இ. தீவுகள் பந்துவீச்சாளர்

2nd Aug 2022 11:41 AM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா 27 ரன்கள் எடுத்தார். மே.இ. தீவுகள் அணியின் ஒபட் மெக்காய் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். மே.இ. தீவுகள் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிராண்டன் கிங் 68 ரன்கள் எடுத்தார்.

மே.இ. தீவுகள் அணியின் 25 வயது இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஒபட் மெக்காய், இதுவரை 2 ஒருநாள், 18 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ADVERTISEMENT

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மிகச்சிறந்த டி20 பந்துவீச்சு மற்றும் இந்தியாவுக்கு எதிரான மிகச்சிறந்த டி20 பந்துவீச்சு என இரு முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளார் ஒபட் மெக்காய். இந்தியாவுக்கு எதிராக டி20யில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் பந்துவீச்சாளரும் மெக்காய் தான். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT