செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிகளில் எந்த மாநில வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்?

2nd Aug 2022 03:03 PM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன், மகளிர் என இரு பிரிவுகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு பேர் பங்கேற்கிறார்கள். 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

26 செஸ் கிராண்ட்மாஸ்டர்களைக் கொண்ட தமிழ்நாட்டிலிருந்து இந்த ஒலிம்பியாட் போட்டியில் எட்டு பேர் பங்கேற்கிறார்கள். ஓபன் பிரிவில் ஆறு பேரும் மகளிர் பிரிவில் இருவரும் பங்கேற்கிறார்கள். 

ADVERTISEMENT

ஓபன் பிரிவில் அதிகபட்சமாக 6 வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மகளிர் பிரிவில் அதிகபட்சமாக 4 வீராங்கனைகள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.

ஓபன் பிரிவு

இந்தியா ஏ

ஹரிகிருஷ்ணா (ஆந்திரா), விதித் குஜ்ராதி (மஹாஷ்டிரம்), அர்ஜுன் எரிகைசி (தெலங்கானா), எஸ்.எல். நாராயணன் (கேரளா), கே. சசிகிரண் (தமிழ்நாடு), என். ஸ்ரீநாத் (பயிற்சியாளர்)

இந்தியா பி

நிஹல் சரின் (கேரளா), டி. குகேஷ் (தமிழ்நாடு), பி. அதிபன் (தமிழ்நாடு), பிரக்ஞானந்தா (தமிழ்நாடு), ருனாக் சத்வனி (மஹாராஷ்டிரம்), ஆர் பி ரமேஷ் (பயிற்சியாளர்)

இந்தியா சி

சூர்யா சேகர் கங்குலி (மேற்கு வங்கம்), எஸ். பி. சேதுராமன் (தமிழ்நாடு), கார்த்திகேயன் முரளி (தமிழ்நாடு), அபிஜீத் குப்தா (ராஜஸ்தான்), அபிமன்யூ புரானிக் (மஹாராஷ்டிரம்)

ஓபன் பிரிவு: இந்திய அணிகளில் மாநிலங்களின் பங்களிப்பு

தமிழ்நாடு - 6
மஹாராஷ்டிரம் - 3 
கேரளா - 2
ஆந்திரா - 1
தெலங்கானா - 1
மேற்கு வங்கம் - 1
ராஜஸ்தான் - 1

மகளிர் பிரிவு

இந்தியா ஏ

ஹம்பி (ஆந்திரா), ஹரிகா (ஆந்திரா), வைஷாலி (தமிழ்நாடு), தானியா சச்தேவ் (தில்லி), பக்தி குல்கர்னி (கோவா), அபிஜித் குன்டே (பயிற்சியாளர்)

இந்தியா பி

வந்திகா அகர்வால் (தில்லி), பத்மி ராவத் (ஒடிஷா), மேரி ஆன் கோம்ஸ் (மேற்கு வங்கம்), செளம்யா சாமிநாதன் (கேரளா), திவ்யா தேஷ்முக் (மஹாராஷ்டிரம்), ஸ்வப்னில் தோபடே (பயிற்சியாளர்)

இந்தியா சி

ஈஷா (மஹாராஷ்டிரம்), வர்ஷினி சாஹிதி (ஆந்திரா), பிரதியுஷா (ஆந்திரா), பி.வி. நந்திதா (தமிழ்நாடு), விஷ்வா வாஸ்னவாலா (குஜராத்) 

மகளிர் பிரிவு: இந்திய அணிகளில் மாநிலங்களின் பங்களிப்பு

ஆந்திரா - 4
தமிழ்நாடு - 2
தில்லி - 2
மஹாராஷ்டிரம் - 2
குஜராத் - 1
ஒடிஷா - 1
மேற்கு வங்கம் - 1
கேரளா - 1
கோவா - 1

ADVERTISEMENT
ADVERTISEMENT