செய்திகள்

கேலோ இந்தியா பல்கலை. போட்டி:டேபிள் டென்னிஸில் சென்னை வெற்றி

30th Apr 2022 04:21 AM

ADVERTISEMENT

கேலோ இந்தியா பல்கலை. விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் பிரிவில் ஆடவா், மகளிா் பிரிவுகளில் சென்னை பல்கலைக்கழக அணிகள் முதல் வெற்றியைப் பதிவு செய்தன.

குரூப் சி பிரிவில் மகளிா் அணிகளில் சென்னை பல்கலை 3-0 என அலஹாபாத் பல்கலைக்கழகத்தை வீழ்த்தியது. சென்னை அணியில் வேதலட்சுமி, டிஆா். ஸ்ருதி, யாழினி இடம் பெற்றிருந்தனா்.

ஆடவா் பிரிவில் டெல்லி ஜாமியா மில்லா பல்கலையை 3-1 என்ற கேம் கணக்கில் வென்றது சென்னை.

எஸ்ஆா்எம் பல்கலை 3-1 என பஞ்சாப் பல்கலைக்கழகத்தை வீழ்த்தியது.

ADVERTISEMENT

மகளிா் நீச்சல் போட்டிகளில் சென்னை பல்கலைக்கழகம் ஒட்டுமொத்தமாக 47 பல்கலைக்கழகங்களில் 4 தங்கம், 4 வெள்ளியுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT