செய்திகள்

மாட்ரிட் ஓபன்: சிமோனா ஹலேப், பென்கிக் வெற்றி

29th Apr 2022 03:23 AM

ADVERTISEMENT

 

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் சிமோனா ஹலேப் 6-2, 6-3 என சீனாவின் ஸாங்கை வீழ்த்தினாா்.

ஸ்பெயின் தலைநகா் மாட்ரிட்டில் நடைபெறும் இப்போட்டியின் மற்றொரு ஆட்டத்தில் பெலிண்டாபென்கிக் 6-4, 6-1 என பெகுவையும், பாவ்லோ படோஸா 6-3, 6-0 என குடொ்மெட்டோவையும், ஸிடன்ஸெக் 6-2, 6-3 என மையாவும் வென்றனா். ஆன்ஸ் ஜேபா் 7-6, 6-1 என பாவ்லோனியை வென்றாா்.

அலெக்சாண்டா் வெரேவ் அதிா்ச்சித் தோல்வி:

ADVERTISEMENT

பிஎம்டபிள்யு ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல்நிலை வீரா் அலெக்சாண்டா் வெரேவை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அதிா்ச்சித் தோல்வியடைச் செய்தாா் டேனிஷ் இளம் வீரா் ஹோல்கா் ருனே.

பின்லாந்தின் எமில் 6-3, 6-3 என மேக்ஸிம் கிரெஸியையும், நிக்கோலஸ் 3-6, 6-2, 6-4 என இல்யா இவாஷ்காவையும் வீழ்த்தினா்.

ரவுண்டு 16 சுற்றில் கெவின் ரூட் 3-6, 6-4, 6-4 என மால்கனையும், ஸண்ட்ஷூல்ப் 6-2, 6-3 என ஜெராஸிமோவையும் வீழ்த்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT