செய்திகள்

துளிகள்...

29th Apr 2022 02:32 AM

ADVERTISEMENT

 

ரஞ்சி கோப்பை நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் பெங்களூருவில் வரும் ஜூன் 4 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. நான்கு காலிறுதி ஆட்டங்கள் ஜூன் 4 முதல் 8 வரையும், அரையிறுதி ஆட்டங்கள் 12 முதல் 16 தேதி வரையும், இறுதி ஆட்டம் 20 முதல் 24 தேதிக்குள்ளும் நடைபெறவுள்ளன. மேற்கு வங்கம்-ஜாா்க்கண்ட், மும்பை-உத்தரகண்ட், கா்நாடகம்-உத்தரப்பிரதேசம், பஞ்சாப்-மத்தியபிரதேசம் காலிறுதியில் மோதுகின்றன.

------------------

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டா் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த 5 ஆண்டுகளாக கேப்டனாக இருந்த ஜோ ரூட் அண்மையில் விலகினாா். அவரது தலைமையில் கடைசியாக ஆடிய 17 டெஸ்ட்களில் 1-இல் மட்டுமே இங்கிலாந்து வென்றது. தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, இந்தியாவுடன் அடுத்து டெஸ்ட் ஆட்டங்களில் ஆடுகிறது.

ADVERTISEMENT

-------------

ஐபிஎல் அணியான ஹைதராபாத் சன்ரைசா்ஸ் பௌலா் உம்ரன் மாலிக் சிறந்த பொக்கிஷம் போன்றவா். அவரை கவனமாக கையாள வேண்டும் என நியூஸிலாந்து மூத்த வீரா் வெட்டோரி கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT