செய்திகள்

டெல்லிக்கு 4-ஆவது வெற்றி; கொல்கத்தாவுக்கு 6-ஆவது தோல்வி 

29th Apr 2022 02:46 AM

ADVERTISEMENT


மும்பை: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடர் 41-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குல்தீப் சுழலில் வீழ்ச்சி: இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வியாழக்கிழமை இரவு மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி பெளலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க பேட்டர்கள் ஆரோன் பின்ச் 3, வெங்கடேஷ் ஐயர் 6, பாபா இந்திஜித் 6, சுனில் நரைன் 0, ஆன்ட்ரே ரஸ்ஸல் 0 என வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.   குல்தீப் யாதவ் சுழலில் அனைவரும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.

அணியை சரிவில் இருந்து மீட்க முயன்ற கேப்டன் ஷிரேயஸ் ஐயரும் நீண்ட நேரம் நிலைக்காமல் 4 பவுண்டரியுடன் 42 ரன்களை எடுத்து அவுட்டானார். 83/6 ரன்கள் என தடுமாறிக் கொண்டிருந்தது கொல்கத்தா.

நிதிஷ் ராணா அபாரம் 57: பின்னர் நிதிஷ் ராணாவும்-ரிங்கு சிங்கும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.  3 பவுண்டரியுடன் 23 ரன்களுடன் ரிங்கு சிங்கும், ரன் ஏதுமின்றி டிம் செளதியும் அவுட்டானார்கள். இளம் வீரர் நிதிஷ் ராணா 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 57 ரன்களை விளாசி முஸ்தபிஸþர் பந்தில் வெளியேறினார். 

ADVERTISEMENT

கொல்கத்தா 146/9: நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 146/9 ரன்களை எடுத்தது கொல்கத்தா.

குல்தீப் 4, முஸ்தபிஸþர் 3 விக்கெட்: டெல்லி தரப்பில் அபாரமாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4/14, முஸ்தபிஸþர் ரஹ்மான் 3/18  விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

டெல்லி கேபிடல்ஸ் வெற்றி 150/6:  147 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் 8 பவுண்டரியுடன் டேவிட் வார்னர் 42 ரன்களையும், லலித் யாதவ் 22 ரன்களையும் எடுத்தனர்.  இருவரும் இணைந்து இரண்டாம்  விக்கெட்டுக்கு 65 ரன்களை சேர்த்தனர். 

ரோவ்மேன் பவல் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 16 பந்துகளில் 33 ரன்களை விளாசி தனது அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

அவருக்கு உறுதுணையாக ஆடிய அக்ஸர் படேல் 24 ரன்களை எடுத்து வெளியேறினார். ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். 19 ஓவர்களில் டில்லி அணி 150/6 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. கொல்கத்தா தரப்பில் உமேஷ் யாதவ் 3/24 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இது டெல்லி அணிக்கு நான்காவது வெற்றியாகும். கொல்கத்தாவுக்கு 6-ஆவது தோல்வியாகும்.

புள்ளிகள் பட்டியல்

(டெல்லி - கொல்கத்தா ஆட்டம் (41) வரை)

குஜராத்    8    7    1    14
ராஜஸ்தான்    8    6    2    12
ஹைதராபாத்    8    5    3    10
லக்னௌ    8    5    3    10
பெங்களூர்    9    5    4    10
டெல்லி    8    4    4    8
பஞ்சாப்    8    4    4    8
கொல்கத்தா    9    3    6    6
சென்னை    8    2    6    4
மும்பை    8    0    8    0

ADVERTISEMENT
ADVERTISEMENT