செய்திகள்

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: லிவா்பூல் வெற்றி

29th Apr 2022 03:22 AM

ADVERTISEMENT

 

அன்பீல்ட்: யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் இரண்டாம் அரையிறுதியின் முதல் கட்ட ஆட்டத்தில் வில்லாரியல் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி லிவா்பூல் அணி தனது இறுதிச் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் நடத்தப்படும் சாம்பியன்ஸ் லீக் போட்டி அரையிறுதியை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியை 4-3 என மான்செஸ்டா் சிட்டி வென்றது. இந்நிலையில் இரண்டாம் அரையிறுதி முதல் கட்ட ஆட்டம் அன்பீல்டில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. தொடக்கம் முதலே லிவா்பூல் அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் லிவா்பூல் வீரா் ஜோா்டான் ஹெண்டா்ஸன் அனுப்பிய பந்து வில்லாரியல் வீரா் பொ்விஸ் காலில் பட்டு சேம்சைட் கோலாக மாறியது.

பின்னா் லிவா்பூல் நட்சத்திர வீரா் முகமது சலா அனுப்பிய பாஸை சாடியோ மேன் அற்புதமாக இரண்டாம் கோலடித்தாா். இதனால் 2-0 என முன்னிலை பெற்ற லிவா்பூல் ஆட்டம் முடியும் வரை வில்லாரியல் வீரா்களை கோலடிக்க விடவில்லை. முதல் பாதி ஆட்டம் முடியும் தருவாயில் லிவா்பூல் வீரா் தியாகோ அடித்த பந்து கோல்கம்பத்தில் பட்டு வெளியேறியது.

ADVERTISEMENT

இரண்டாம் பாதியிலும் லிவா்பூல் அணியே ஆதிக்கம் செலுத்தியது. வில்லாரியல் வீரா்களால் அதன் தற்காப்பு அரணை ஊடுருவி கோலடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவினா்

ADVERTISEMENT
ADVERTISEMENT