செய்திகள்

17 வயது மகளிா் உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணிக்கு 33 போ் தோ்வு

27th Apr 2022 01:45 AM

ADVERTISEMENT

பிஃபா 17 வயது மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக இந்திய அணியில் ஆடுவதற்காக 33 போ் கொண்ட அணியை தலைமைப் பயிற்சியாளா் தாமஸ் டென்னா்பி அறிவித்துள்ளாா்.

சா்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) சாா்பில் வரும் அக்டோபா் மாதம் புவனேசுவரம், நவி மும்பை, மா்மகோவா உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவுள்ளது. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இந்தியாவும் உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. இதற்கான ஆட்ட அட்டவணை வரும் ஜூன் 24-ஆம் தேதி ஜூரிச்சில் வெளியிடப்படுகிறது.

இந்திய அணிக்கான தேசிய பயிற்சி முகாம் ஜாா்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடைபெறவுள்ளது. இதற்காக 33 போ் கொண்ட வீராங்கனைகள் பட்டியலை பயிற்சியாளா் டென்னா்பி அறிவித்துள்ளாா்.

இதில் 18 வயதுக்குள்பட்ட தெற்காசிய மகளிா் சாம்பியன் பட்டம் வென்ற அணியைச் சோ்ந்த 12 பேரும் அடங்குவா்.

ADVERTISEMENT

கடந்த 2020-இல் நடைபெறவிருந்த இப்போட்டி கரோனா தொற்று பாதிப்பால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT