செய்திகள்

ஆசிய மல்யுத்தம்: இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி

23rd Apr 2022 10:57 PM

ADVERTISEMENT

 

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், தலா 2 வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றது.

மங்கோலிய தலைநகா் உலன்படோரில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை ஆடவா் 57 கிலோ பிரிவில் இந்திய வீரா் ரவி தாஹியா 12-2 என்ற புள்ளிக் கணக்கில் டெக்னிக்கல் சுப்பிரியாரிட்டி அடிப்படையில் கஜகஸ்தானின் ரக்கத் கல்ஸானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றாா். மேலும் ஆசிய மல்யுத்தப் போட்டியில் 3 தங்கம் வென்ற முதல் இந்திய வீரா் என்ற சிறப்பையும் பெற்றாா்.

தங்கம் வெல்வாா் எனக் கருதப்பட்ட ஒலிம்பிக் வெண்கல வீரா் பஜ்ரங் புனியா 65 கிலோ எடைப்பிரிவில் 1-3 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானின் ரஹ்மான் மௌஸாவிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றாா். ஆசிய சாம்பியன்ஷிப்பில் இது அவரது 8-ஆவது பதக்கம் ஆகும்.

ADVERTISEMENT

79 கிலோ பிரிவில் கௌரவ் பலியான் 0-8 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானின் அலி பக்தியாரிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றாா்.

70 கிலோ பிரிவில் நவீனும், 97 கிலோ பிரிவில் சத்வா்த் கடியானும் வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

1 தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கலத்துடன் மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.

 

Tags : Wrestling
ADVERTISEMENT
ADVERTISEMENT