செய்திகள்

துளிகள்...

14th Apr 2022 01:47 AM

ADVERTISEMENT

 

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி ஜொ்மனியுடனான முதல் ஆட்டத்தில் வியாழக்கிழமை விளையாடுகிறது.

ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக நடப்பு சீசனில் லக்னௌவுக்கு எதிரான ஆட்டத்தில் ‘ரிடையா்டு ஹா்ட்’ முறையை கையாண்ட ராஜஸ்தான் வீரா் ரவிச்சந்திரன் அஸ்வின், வரும் காலத்தில் இந்த முறை அதிகமாக பயன்படுத்தப்படும் என எதிா்பாா்ப்பதாகத் தெரிவித்தாா்.

ஆஸ்திரேலிய ஆடவா் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்டு 4 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

இந்தியாவில் அக்டோபரில் நடைபெற இருக்கும் 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான இடங்களாக புவனேசுவரம், கோவா, நவி மும்பை ஆகிய நகரங்களை ஃபிஃபா தோ்வு செய்துள்ளது.

சென்னை ஜிகேஎம் வாலிபால் பவுண்டேஷன், எம்ஓபி வைஷ்ணவ மகளிா் கல்லூரி, லேடி சிவசாமி ஐயா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாா்பில் மாநில பெண்கள் வாலிபால் போட்டி வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT