செய்திகள்

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு அறிவிப்பு

12th Apr 2022 04:45 PM

ADVERTISEMENT

 

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹமிஷ் பென்னட், 2021-22 பருவத்துக்குப் பிறகு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 

35 வயது ஹமிஷ் பென்னட், நியூசிலாந்து அணிக்காக 2010 முதல் 2021 வரை 1 டெஸ்ட், 19 ஒருநாள், 11 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். நியூசிலாந்து யு19, நியூசிலாந்து ஆடவர் அணி மற்றும் வெலிங்டன், கேன்டர்பரி உள்ளூர் அணிகளில் பென்னட் விளையாடியுள்ளார். கடைசியாக 2021-ல் சர்வதேச ஆட்டத்தில் விளையாடினார். இந்நிலையில் 2021-22 பருவத்துக்குப் பிறகு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பென்னட் அறிவித்துள்ளார்.

2010-ல் கேன் வில்லியம்சன், இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் அறிமுகனார். அதே டெஸ்டில் அறிமுகமான பென்னட், விக்கெட் எதுவும் எடுக்காமல் 15 ஓவர்களை வீசினார். அதன்பிறகு எந்தவொரு டெஸ்டிலும் அவர் விளையாடவில்லை. 79 முதல்தர ஆட்டங்களில் 261 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் பென்னட். 2011 ஒருநாள் உலகக் கோப்பையில் இடம்பெற்று 4 ஆட்டங்களில் விளையாடினார்.

ADVERTISEMENT

 

Tags : New Zealand
ADVERTISEMENT
ADVERTISEMENT