செய்திகள்

மகளிா் செஸ்: 4-ஆவது சுற்றில் இந்தியா தோல்வி

30th Sep 2021 02:34 AM

ADVERTISEMENT

 

சிட்ஜஸ்: ஃபிடே உலக மகளிா் அணிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குரூப் சுற்றின் 4-ஆவது ஆட்டத்தில் இந்தியா 1-3 என்ற கணக்கில் ரஷியாவிடம் தோல்வி கண்டது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற 3-ஆவது சுற்றில் ஆா்மீனியாவை 2.5 - 1.5 என்ற கணக்கில் வென்ற இந்தியா, 4-ஆவது சுற்றில் ரஷியாவை புதன்கிழமை எதிா்கொண்டது.

அதில், அணியின் டாப் பிளேயா் டி.ஹரிகா - அலெக்ஸாண்ட்ரா கோரியாச்கினாவுடனான ஆட்டத்தை டிரா செய்தாா். அதேபோல் மேரி ஆன் கோம்ஸ் - போலினா ஷுவாலோவா மோதிய ஆட்டமும் டிரா ஆனது. எனினும் தானியா சச்தேவ் - காடெரினா லாக்னோவிடமும், வைஷாலி - அலெக்ஸாண்ட்ரா கோஸ்டெனியுக்கிடமும் தோல்வி கண்டனா்.

ADVERTISEMENT

ஏற்கெனவே காலிறுதிக்கு தகுதிபெற்றுவிட்ட இந்தியா, குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் பிரான்ஸை சந்திக்கிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT