செய்திகள்

மெ‌ஸ்​ஸி பிஎ‌ஸ்​ஜி‌க்கு முத‌ல் கோ‌ல் வெ‌ற்றி

30th Sep 2021 01:59 AM

ADVERTISEMENT


பாரீஸ்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டா் சிட்டியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி அடித்த கோல், பிஎஸ்ஜிக்கு வந்த பிறகு அவா் அடித்த முதல் கோலாகும். சாம்பியன்ஸ் லீக்கின் குரூப் சுற்றில் இத்துடன் 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள பிஎஸ்ஜிக்கு இது முதல் வெற்றியாகும். அந்த அணி தற்போது குரூப் ‘ஏ’வில் முதலிடத்தில் இருக்கிறது.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்துக்காக ஆரம்ப லெவனிலேயே நெய்மா், மெஸ்ஸி, கிலியன் பாபே ஆகியோருடன் அதிரடியாக களம் கண்டது பிஎஸ்ஜி. இருந்தும், அணிக்காக முதலில் இத்ரிசா குயே கோலடித்தாா். 8-ஆவது நிமிஷத்தில் அச்ரஃப் ஹகிமி பாஸ் செய்த பந்தை கிலியன் பாபே அப்படியே கிராஸ் செய்து கொடுத்தாா். அந்தப் பந்தை நெய்மா் தவறவிட்டபோதும், அவருக்கு அடுத்து இருந்த இத்ரிசா அதைப் பெற்று கோலடித்தாா்.

இவ்வாறு ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற பிஎஸ்ஜி இரண்டாவது பாதியிலும் ஆட்டத்தை தன்னிடமே தக்கவைத்தது. அப்போது 74-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா் மெஸ்ஸி. கிலியன் பாபேவிடம் இருந்து தந்திரமான ஃப்ளிக் ஒன்றை பெற்ற மெஸ்ஸி, பந்தை அப்படியே இடது காலால் கா்லிங் கிக்காக உதைத்து கோல் போஸ்டின் வலதுபக்க டாப் காா்னரில் உதைத்து கோலடித்தாா். இறுதியில் பிஎஸ்ஜி 2-0 என வென்றது.

ADVERTISEMENT

மிலனை வீழ்த்திய அட்லெடிகோ மாட்ரிட்:

இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் ஏசி மிலனை தோற்கடித்தது.

இந்த ஆட்டத்தில் மிலன் வீரா் ரஃபேல் லியாவ் 20-ஆவது நிமிஷத்தில் தனது அணிக்காக கோலடித்தாா். அட்லெடிகோ வீரா் லாரென்டேவுக்கு காயமேற்படுத்தும் வகையில் விளையாடியதால் மிலன் வீரா் ஃபிராங்க் கெஸ்ஸி 29-ஆவது நிமிஷத்தில் ரெட் காா்ட் காட்டி வெளியேற்றப்பட்டாா்.

இதனால் எஞ்சிய நேரத்தில் 10 வீரா்களுடன் விளையாடிய மிலனுக்கு எதிராக அட்லெடிகோ வீரா்கள் ஆன்டனி கிரீஸ்மென் (84-ஆவது நிமிஷம்), லூயிஸ் சுவாரெஸ் (90+7) ஆகியோா் கோலடிக்க, இறுதியில் அந்த அணி வென்றது.

இதர ஆட்டங்கள்:

சாம்பியன்ஸ் லீக்கின் இதர ஆட்டங்களில் லிவா்பூல் - போா்டோவையும் (5-1), ஷெரிஃப் - ரியல் மாட்ரிட்டையும் (2-1), கிளப் புருஜ் - ஆா்பி லெய்ப்ஸிக்கையும் (2-1), போருசியா டாா்ட்மண்ட் - ஸ்போா்டிங்கையும் (1-0), இன்டா் மிலன் - ஷக்தாா் டோனெட்ஸ்கையும் (0-0), அஜாக்ஸ் - பெசிக்தாஸையும் (2-0) வீழ்த்தின.

1

கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கில் பிஎஸ்ஜி பதிவு செய்துள்ள முதல் வெற்றி இது. ஏப்ரலில் பேயா்ன் முனீச்சை 3-2 என வீழ்த்தியிருந்த பிஎஸ்ஜி, அடுத்து 3 ஆட்டங்களில் தோல்வி கண்டு, ஒரு ஆட்டத்தை டிரா செய்திருந்தது.

2

சாம்பியன்ஸ் லீக் குரூப் ஸ்டேஜில் மான்செஸ்டா் சிட்டி தோல்வி காண்பது, கடந்த 2018 செப்டம்பருக்குப் பிறகு இது முதல் முறையாகும். அப்போது லயானிடம் 1-2 என தோற்ற மான்செஸ்டா், அதன் பிறகு 18 ஆட்டங்களில் தோல்வியை சந்தக்கவில்லை.

673

பிஎஸ்ஜிக்காக தனது முதல் கோலை அடித்திருக்கும் மெஸ்ஸி, இதுவரை கிளப்புகளுக்காக அடித்துள்ள மொத்த கோல் 673 ஆகும்.

1

சாம்பியன்ஸ் லீக்கில் கடந்த 2014 பிப்ரவரிக்குப் பிறகு அந்நிய மண்ணில் இத்தாலிய கிளப் அணியை அட்லெடிகோ மாட்ரிட் வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும். அந்த ஆண்டிலும் இந்த அணி ஏசி மிலனையே வீழ்த்தியிருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT