செய்திகள்

பகலிரவு டெஸ்ட்: இந்திய மகளிர் அணி சிறப்பான தொடக்கம்

30th Sep 2021 11:11 AM

ADVERTISEMENT

 

இந்தியா - ஆஸ்திரேலியா மகளிா் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் கோல்ட்கோஸ்டில் இன்று தொடங்கியுள்ளது. இந்திய மகளிர் அணி முதல்முறையாகப் பகலிரவு டெஸ்டில் பங்கேற்கிறது. மகளிர் கிரிக்கெட்டில் இது 2-வது பகலிரவு டெஸ்ட். 

இரு நாட்டு மகளிா் அணிகளும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்திக்கின்றன. கடைசியாக 2006-ல் இவ்விரு அணிகளும் டெஸ்டில் மோதியிருந்தன. அடிலெய்டில் நடைபெற்ற அந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மேக்னா சிங், யாஸ்திகா பாட்டியா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்கள். 

ADVERTISEMENT

இந்திய அணி 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் எடுத்துள்ளது. ஷஃபாலி வர்மா 19 ரன்களும் மந்தனா 51 ரன்களும் எடுத்து விளையாடி வருகிறார்கள்.

Tags : Australia day night
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT