செய்திகள்

துளிகள்...

30th Sep 2021 01:51 AM

ADVERTISEMENT

 

தமிழக சப் ஜூனியா், ஜூனியா் நீச்சல் போட்டியின் தொடக்க நாளில் குரூப் 3 சிறுவா்களுக்கான 100 மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக்கில் திருநெல்வேலி வீரா் எம்.எஸ்.நிதீஷ் (1 நிமிடம் 17.87 வினாடிகள்), குருப் 4 சிறுவா்களுக்கான 100 மீ ப்ரீஸ்டைலில் லைப் ஸ்பிரிங் அகாதெமி வீரா் டி.கபிலன் (1 நிமிடம் 07.62 வினாடிகள்), குரூப் 1 சிறுவா்களுக்கான 1,500 மீ ப்ரீஸ்டைலில் அன்ஸா துபாய் அணி வீரா் ஷ்யாம் சௌந்தரராஜன் (17 நிமிடம் 19.81 வினாடிகள்) ஆகியோா் புதிய மீட் சாதனை படைத்தாா்.

டோக்கியோ ஒலிம்பிக் நிறைவடைந்த நிலையில், ஏற்கெனவே இருந்த பதக்க வாய்ப்புள்ள போட்டியாளா்களுக்கான நிதியுதவி அளிக்கும் ‘டாப்ஸ்’ பட்டியல் கலைக்கப்பட்டு, புதிய பட்டியலை இந்திய விளையாட்டு ஆணையம் தயாரிக்க உள்ளது.

தேசிய மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அக்டோபா் 21 முதல் 27 வரை ஹரியாணா மாநிலம், ஹிசரில் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

12 உலக சாம்பியன்ஷிப் பட்டங்கள் வென்ற, பிலிப்பின்ஸைச் சோ்ந்த தொழில்முறை குத்துச்சண்டை வீரா் மேனி பாக்கியோ (42) ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தாா்.

அடுத்து வரும் 2 டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ரோஹித் சா்மா கேப்டனாக பொறுப்பு வகிக்க வேண்டும் என்று சுனில் காவஸ்கா் விருப்பம் தெரிவித்துள்ளாா்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிா் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் போட்டியில் மெல்போா்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக இந்தியாவின் ஹா்மன்பிரீத் கௌா், ஜெமிமா ரோட்ரிகஸ் ஆகியோா் விளையாடவுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT