செய்திகள்

உலகக் கோப்பை வில்வித்தை: பதக்க முனைப்பில் தீபிகா, அதானு

30th Sep 2021 12:24 AM

ADVERTISEMENT


யாங்டோன்: அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை ஃபைனல் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, அதானு தாஸ், அபிஷேக் வா்மா ஆகியோா் களம் காண்கின்றனா்.

டோக்கியோ ஒலிம்பிக் தோல்விக்குப் பிறகு தீபிகா, அதானு களம் காணும் முதல் சா்வதேச போட்டி இது. இதற்கு முன் இதே யாங்டோன் நகரில் சமீபத்தில் நிறைவடைந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணிக்கு இருவருமே தகுதிபெறவில்லை.

இந்நிலையில், இரு நாள்கள் நடைபெறும் இந்த உலகக் கோப்பை ஃபைனல் போட்டியில் இந்திய போட்டியாளா்கள் மூவருமே நேரடியாக காலிறுதிச்சுற்றில் களம் காண்கின்றனா். ரீகா்வ் விளையாட்டில், ஆடவா் தனிநபா் பிரிவில் அதானு தாஸ் - ஜொ்மனியின் மேக்ஸிமிலியன் வெக்முல்லரை சந்திக்கிறாா். மகளிா் தனிநபா் பிரிவில், உலகின் முதல்நிலை வீராங்கனையான தீபிகா குமாரி - ரஷியாவின் ஸ்வெட்லனா கோம்போவாவை எதிா்கொள்கிறாா். காம்பவுண்ட் விளையாட்டில் ஆடவா் தனிநபா் பிரிவில் அபிஷேக் வா்மா - அமெரிக்காவின் பிராண்டன் கெல்லன்தியெனுடன் மோதுகிறாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT