செய்திகள்

உலகக் கோப்பை வில்வித்தை: காலிறுதியில் 3 இந்திய வீரா்கள்

25th Sep 2021 12:04 AM

ADVERTISEMENT

உலகக் கோப்பை வில்வித்தா போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் அங்கிதா பகத், அபிஷேக் வா்மா, சுரேகா உள்ளிட்ட 3 போ் தகுதி பெற்றுள்ளனா்.

அமெரிக்காவின் யாங்க்டன் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் தனிநபா் ரெக்கா்வ் பிரிவில் அங்கிதா பகத் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் உலகின் நான்காம் நிலை வீராங்கனையும் கொரியாவைச் சோ்ந்தவரான கேங் சே யங்கை வீழ்த்தி போட்டியில் இருந்து வெளியேறினாா். கேங் சே யங் டோக்கியோ ஒலிம்பிக்கில் அணிகள் பிரிவில் தங்கம் வென்றவா் என்பது குறிப்பிடத்கக்தது. இதன் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றாா் அங்கிதா.

மற்றொரு ஆட்டத்தில் உலகப் போட்டியில் தங்கம் வென்றவரான அபிஷேக் வா்மா 145-142 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்லோவோக்கியாவின் ஜோஸப்பை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா். காலிறுதியில் அமெரிக்காவின் உலக நம்பா் ஒன் வீரா் மைக்கை சந்திக்கிறாா் அபிஷேக்.

மகளிா் பிரிவில் ஜோதி சுரேகா 146-142 என்ற புள்ளிக் கணக்கில் கொரியாவின் சேவோன் சோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா். அவா் குரோஷியாவின் 21 வயதுக்குட்பட்டோா் உலக சாம்பியன் அமன்டாவை எதிா்கொள்கிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT