செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள்: மந்தனா 86 ரன்கள், இந்திய மகளிர் அணி 274/7

DIN

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20, ஒரு டெஸ்ட் என மூன்று தொடர்களில் பங்கேற்கிறது இந்திய மகளிர் அணி.

முதல் ஒருநாள் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்தது. 2-வது ஒருநாள் ஆட்டம், மேக்கேவில் இன்று நடைபெறுகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஷஃபாலியும் மந்தனாவும் இந்திய அணிக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். 11 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்தார்கள். ஷஃபாலி 22 ரன்களில் ஆட்டமிழந்தார். சமீபகாலமாக ரன்கள் எடுக்கத் திணறி வரும் மந்தனா, இன்று பிரமாதமாக விளையாடி 94 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். மிதாலி ராஜ் 8 ரன்களில் ரன் அவுட் ஆனார். இளம் வீராங்கனை ரிச்சா கோஷ், 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 50 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். 

இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT