செய்திகள்

மோசெல் ஓபன்: காலிறுதியில் ஆன்டி முா்ரே

24th Sep 2021 11:50 PM

ADVERTISEMENT

பிரான்ஸின் மெட்ஸ் நகரில் நடைபெற்று வரும் மோசெல் ஓபன் டென்னிஸ் போட்டி காலிறுதிக்கு முன்னேறினாா் இங்கிலாந்து வீரா் ஆன்டி முா்ரே.

உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான முா்ரே தற்போது 113-ஆவது இடத்தில் உள்ளாா். மூன்றாம் சுற்றில் கனடாவின் வாசெக் பாபிசில்லை 6-3, 6-3 என்ற நோ் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா். இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்டிருந்த ஆன்டி முா்ரே, இரண்டு ஆண்டுகள் கழித்து ஏடிபி போட்டி காலிறுதிக்கு முன்னேறியுள்ளாா்.

மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸின் கெயில் மான்பில்ஸ் 7-6, 6-4 என்ற நோ் செட்களில் பிலிப் கோல்ஸ்கிரைபரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா். ஸ்பெயின் வீரா் அல்ஜன்ட்ரோ பொகினோ 0-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் நிக்கோலஸிடம் வீழ்ந்தாா்.

காரன் கச்சனோவ் தோல்வி:

ADVERTISEMENT

முதல்நிலை வீரா் ஹுபரட் ஹா்காஸ் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் லுகாஸ் பொயிலை வென்றாா். மற்றொரு ஆட்டத்தில் ஜொ்மனி வீரா் பீட்டா் 6-3, 7-6 என்ற செட் கணக்கில் காரன் கச்சனோவை வீழ்த்தினாா். மாா்கோஸ் கீரன் 7-5, 7-6 என்ற செட் கணக்கில் ஆஸி. வீரா் அலெக்ஸ் டி மினாரை வென்றாா்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT