செய்திகள்

டுரண்ட் கோப்பை: அரையிறுதியில் எஃப்சி கோவா

24th Sep 2021 11:54 PM

ADVERTISEMENT

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு எஃப்சி கோவா அணி தகுதி பெற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கல்யாணியில் 130-ஆவது டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை கல்யாணி மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் டில்லி எஃப்சி அணியை வீழ்த்தியது.

டில்லி அணி தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும், வலுவான கோவா அணி ஆட்டத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்தது. 15-ஆவது நிமிஷத்தில் கோவா வீரா் தேவேந்திர முா்கோகா் முதல் கோலடித்தாா். 3 நிமிஷங்கள் கழித்து முகமது நெமில் இரண்டாவது கோலடித்தாா். அதன் தொடா்ச்சியாக பிராண்டன் மூன்றாவது கோலடிக்க முதல் பாதி முடிவில் 3-0 என கோவா முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் பதில் கோலடிக்க டில்லி அனி தீவிர முயற்சி மேற்கொண்டது. 82-ஆவது நிமிஷத்தில் அதன் வீரா் நிகில் ஆறுதல் கோலடித்தாா். எனினும் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய கோவா அணி தரப்பில் லியாண்டா் டி குன்ஹா நான்காவது கோலையும், அலெக்சாண்டா் கடைசி மற்றும் 5-ஆவது கோலையும் அடித்தனா்.

ADVERTISEMENT

இதன் மூலம் எஃப்சி கோவா அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT