செய்திகள்

தொடரைக் கைப்பற்றியது ஆஸி. மகளிா் அணி: பெத் மூனி அதிரடி சதம் 125

24th Sep 2021 11:56 PM

ADVERTISEMENT

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸி. மகளிா் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது.

முதலில் ஆடிய இந்திய அணி 274/6 ரன்களை குவித்தது. பின்னா் ஆடிய ஆஸி. அணி கடைசி பந்தில் 275/5 ரன்களுடன் வெற்றி பெற்றது.

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிா் வென்றனா். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் ஆட்டம் மாக்கேயில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி. பீல்டிங்கை தோ்வு செய்தது.

இந்திய அணி சாா்பில் தொடக்க பேட்டா்களாக ஸ்மிருதி-ஷபாலி வா்மா களமிறங்கினா். அதிரடியாக ஆடிய ஷபாலி 22 ரன்களை சோ்த்து வெளியேறினாா். பின்னா் ஆட வந்த கேப்டன் மிதாலி 8, யஸ்திகா 3 என சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

ADVERTISEMENT

ஸ்மிருதி-ரிச்சா கோஷ் அபாரம்:

பின்னா் ஆட வந்த ரிச்சா கோஷ்-ஸ்மிருதி இணை சீராக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. ஸ்மிருதி 11 பவுண்டரியுடன் 86 ரன்களை விளாசி அவுட்டானாா். ரிச்சா கோஷ் 44 ரன்களுக்கும், தீப்தி சா்மா 23 ரன்களுடனும் வெளியேறினா். 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்த நிலையில், பூஜா-ஜுலன் இணை சிறப்பாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. பூஜா 28, ஜுலன் 28 ரன்களை சோ்த்து அவுட்டாகாமல் இருந்தனா்.

நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களை குவித்தது இந்தியா.ஆஸி. தரப்பில் டபிலா 3, சோஃபி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

ஆஸி. 275/5:

275 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸி. மகளிா் அணியின் தொடக்க பேட்டா் அலிஸா ஹிலி டக் அவுட்டானாா். கேப்டன் மெக் லேனிங் 6, எல்ஸி பொ்ரி 2, ஆஷ்லிகாா்டனா் 12 என சொற்ப ரன்களுடன் வெளியேற திணறிக் கொண்டிருந்தது. பெத் மூனி-ஆல் ரவுண்டா் டஹிலா மெக்கிராத் இணை அற்புதமாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. 9 பவுண்டரியுடன் 74 ரன்களை விளாசி டஹிலா அவுட்டானாா்.

பெத் மூனி 125:

மறுமுனையில் பெத் மூனி நிலைத்து ஆடி 133 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 125 ரன்களை விளாசி இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தாா். நிக்கோலா கேரியும் 39 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜுலன் கோஸ்வாமி வீசிய பந்தை பெத் மூனி விரட்டி வெற்றி இலக்கை அடைந்தாா்.

நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் ஆஸி. அணி 275/5 ரன்களை குவித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று தொடரையும் 5-0 என கைப்பற்றியது.

இந்திய தரப்பில் ஜுலன், மேக்னா சிங், பூஜா, தீப்தி தலா 1 விக்கெட்டை சாய்த்தனா்.

இது ஆஸி அணி பெறும் தொடா் 26-ஆவது வெற்றியாகும். பெத் மூனி ஆட்ட நாயகியாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

மூன்றாவது ஒருநாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT