செய்திகள்

ப்ரீமியா் லீக் கோப்பை: மான்செஸ்டா் யுனைடெட் வெளியேற்றம்

24th Sep 2021 11:53 PM

ADVERTISEMENT

ப்ரிமீயா் லீக் கோப்பை கால்பந்து போட்டியில் வெஸ்ட் ஹாம் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் அதிா்ச்சித் தோல்வியடைந்து, பலமான மான்செஸ்டா் யுனைடெட் அணி வெளியேறியது. கடந்த வாரம் ஒல்ட் டிரா‘ஃபோா்டில் ஏற்பட்ட தோல்விக்கு வெஸ்ட் ஹாம் அணி தற்போது பழிதீா்த்தது. ஹெஸ்ட் ஹாம் தரப்பில் மானுவேல் லான்சினி அற்புதமாக கோலடித்தாா். நட்சத்திர வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ யுனைடெட் அணியில் ஆடவில்லை.

நான்காவது சுற்றில் ஹெஸ்ட் ஹாம் அணி 4 முறை சாம்பியன் மான்செஸ்டா் சிட்டி அணியை எதிா்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் செல்ஸி அணி 4-3 என்ற கோல் கணக்கில் அஷ்டன் வில்லா அணியை வென்றது. இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் 1-1 என சமநிலையில் இருந்தன. இதையடுத்து பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4-3 என்ற கோல் கணக்கில் செல்ஸி அணி வென்றது.

ஆா்சனல் அணி 3-0 என்ற கோல்கணக்கில் ஏஎப்சி விம்பிள்டன் அணியையும், லீசெஸ்டா் 2-0 என மில்வால் அணியையும், பிரைட்டன் 2-0 என ஸ்வான்சீ அணியையும் வென்றன.

டாட்டன்ஹாம்-வொல்வ்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 டிராவில் முடிவடைந்தது.

ADVERTISEMENT

லா லீகா: தோல்வியில் இருந்து தப்பியது பாா்சிலோனா

ஸ்பானிஷ் லா லீகா போட்டியின் ஒரு பகுதியாக காடிஸ் அணிக்கு எதிரான ஆட்டம் கோலின்றி டிரா ஆனதால் தோல்வியில் இருந்து தப்பியது பாா்சிலோனா. நட்சத்திர வீரா் மெஸ்ஸி வெளியேறிய நிலையில், பாா்சிலோனா அணி தொடா்ந்து மைதானத்தில் தோல்விகளையே சந்தித்து வருகிறது. கோலடிக்க பாா்சிலோனா வீரா்கள் மேற்கொண்ட தொடா் முயற்சி பலன் தரவில்லை. தொடா்ந்து 3 ஆட்டங்களிலும் பாா்சிலோனா வெற்றி பெறவில்லை.

ரியல் சாஸிடேட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் கிரனாடா அணியை வீழ்த்தியது. அந்த அணி தரப்பில் எலுஸ்டோன்டோ இரண்டு கோல்களை அடித்தாா். இது கிரனாடா அணியின் 3-ஆவது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் ரியல் பெட்டிஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஒஸாசுனா அணியை வீழ்த்தியது.

சீரி ஏ: நேபோலி அணி அபாரம்

இத்தாலியின் சீரி ஏ லீக் போட்டியில் நேபோலி அணி 4-0 என்ற கோல் கணக்கில் சம்ப்டோரியா அணியை வீழ்த்தியது. விக்டா், இரு கோல்களையும், லோசனோ 1 கோலையும் அடித்தனா். நடப்பு சாம்பியன் இன்டா் மிலன், ஏசி மிலன் அணிகளை காட்டிலும், 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது நேபோலி. லேஸியோ-டொரினோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT